Thursday, August 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/20/large/706827.jpgகாஞ்சியில் வீடு கேட்டு ஆயிரக்கணக்கில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: ஏழைகளுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்படுமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் வீடு கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த வீடுகளை உண்மையில் வீடற்றோருக்கும், நிர்நிலைகளின் ஓரம் குடிசை போட்டு வாழும் ஏழை மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகவதி ஆற்றில் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்புகளே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் அளவீடு செய்ததில் 1,418 வீடுகள் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து ஆற்றில் வீடு கட்டி வசிக்கும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவர்களுக்காக குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...