
மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற எழுத்தாளர், மருத்துவர் கு.கணேசனுக்கு ராஜபாளையத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் வளாகத்தில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் அறம் தலைமை வகித்தார். கிளை துணைத் தலைவர் ரமணி வரவேற்றார். கிளைத் தலைவர் ஆனந்தி, ராஜபாளையம் இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் ஜவகர்லால் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்