
தங்க நகைகளுக்கு தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயமாக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் இன்று காலை அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தங்க நகைகளின் தரத்தை குறிக்க அவற்றில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் நம்பிக்கையுடன் தங்க நகைகளை வாங்குகின்றனர். இதற்கிடையே, மத்திய அரசு முதல்கட்டமாக 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 256 மாவட்டங்களில் மட்டும் தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' முத்திரை பதிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. நகைக் கடைகளில் விற்கப்படும் அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை (எச்யுஐடி) பதிவு செய்யவேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம் (பிஐஎஸ்) அறிவித்துள்ளது. இதற்கு நகை வியாபாரிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்