
விருதுநகர் அருகே தனியார் பேருந்து ஒன்று ஹோட்டலுக்குள் புகு ந்தது. இதில் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள இருக்கண் குடியில் இருந்து பாலவனத்தம், அருப்புக் கோட்டை வழியாக மதுரைக்கு தனியார் பேருந்து ஒன்று நேற்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. பாலவனத்தம் கிராமத்தில் சென்றபோது பேருந்தின் இடது முன்பக்க டயர் வெடித்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இடதுபுறமாக உள்ள ஹோட்டலுக்குள் புகுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்