
மறைந்த மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 20-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்