
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை களில் நாளை முதல் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழகத்தில் முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் தமிழக அறக்கட்டளை சார்பில் ரூ.2.36 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டார். மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்துத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, இணை இயக்குநர் வினய் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்