Saturday, August 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/08/large/702394.jpgவேலூர் கன்டோன்மென்ட்-சென்னை கடற்கரை வரை சாதாரண மின்சார ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக பெயர் மாற்றி அதிக கட்டணம் வசூலிப்பு: திடீர் கட்டண உயர்வை திரும்பப்பெற பயணிகள் கோரிக்கை

வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை சாதாரண பயணிகள் மின்சார ரயில் கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்றைய நிகழ்ச்சியில் பேசிய ஆர்.வேலு, ‘இந்த பயணிகள் ரயில் சேவையில் குறைந்த கட்டணமாக ரூ.10-க்கு டிக்கெட் என்பதால் ஒரு தேநீர் விலையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என பெருமையுடன் குறிப்பிட்டார். அன்று தொடங்கி கரோனா ஊரடங்கால் இந்த ரயில் சேவை நிறுத்தும் வரை குறைந்த கட்டணமாக 10 ரூபாயும் சென்னை கடற்கரைக்கு ரூ.35, அரக்கோணத்துக்கு ரூ.20, திருவள்ளூருக்கு ரூ.25 ஆக வசூலிக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கு தளர்வில் தற்போது சென்னையில் இருந்துஅரக்கோணம் வரை புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்ட நிலையில், மெமு ரயில் என்றழைக்கப்படும் சாதாரண பயணிகள் மின்சார ரயில் சேவையில் வேலூர் கன்டோன்மென்ட் முதல் கடற்கரை வரையிலான ரயில் சேவை கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதுவரை சாதாரண பயணிகள் மின்சார ரயிலாக இருந்ததை விரைவு ரயிலாக பெயரை மாற்றி இயக்கினர். புதிய பெயருடன் கட்டணமும் மாறிவிட்டது. இதுவரை வசூலித்த குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ. 30 ஆகவும் அரக்கோணத்துக்கு ரூ.45, திருவள்ளூருக்கு ரூ.50, கடற்கரைக்கு ரூ.65 ஆகவும் உயர்த்தி விட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...