Tuesday, August 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/18/large/706211.jpgகரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு?- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாட்டின் எதிர்காலமான சிறார்களை பள்ளிக்கு அனுப்பாமல், வறுமை, கடன் உள்ளிட்ட காரணங்களால் வேலைக்கு அனுப்பி, அவர்களை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றும் பழக்கத்தை தடுக்க, கடந்த 1986-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், 2006-ம் ஆண்டு இச்சட்டம் திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி, 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவ சிறார்களை, கடினமான வேலை கொண்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.

உலகளவில் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாகவும், அதில் 9 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் ஆபத்தான வேலைகளை செய்வதாகவும் சர்வதேச அமைப்பு ஒன்றின் சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட நிர்வாகத்தினரின் புள்ளிவிவரப்படி, தொழில் வளம் மிகுந்த கோவையில், 2020-21-ம் ஆண்டில் இதுவரை 13 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர். 2019-20-ல் 50 பேரும், 2018-19-ல் 12 பேரும், 2017-18-ல் 13 பேரும், 2016-17-ல் 5 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...