Thursday, August 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/20/large/706890.jpgதிமிங்கலம் உமிழும் மெழுகுப் பொருள்: ரூ.23 கோடி மதிப்பிலான அம்பர் கிரீஸ் பறிமுதல்

தூத்துக்குடியில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள், தெர்மல் நகர் கேம்ப்-2 கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு வந்த காரை சோதனையிட்டனர். காரில் மெழுகு போன்ற பொருளை கண்டறிந்தனர். அது, திமிங்கலம் உமிழும் அரிய வகை பொருளான அம்பர் கிரீஸ் என்பது தெரியவந்தது.

காரில் இருந்த 23 கிலோ எடை கொண்ட அம்பர் கிரீஸை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் ஒரு கிலோ அம்பர் கிரீஸ் ரூ.1 கோடிக்கு விலை போகும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரீஸின் சர்வதேச மதிப்பு ரூ.23 கோடி எனவும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...