
பெரு நாட்டில் நடக்க உள்ள, உலக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு, தமிழகத்தின் சார்பில் கோவையைச் சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட மற்ற போட்டிகளைப் போல், துப்பாக்கி சுடும் போட்டியிலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று முத்திரை பதித்து வருகின்றனர். ரைபிள் கிளப் எனப்படும் துப்பாக்கி சுடும் பயிற்சி கிளப்புகளில் பங்கேற்று முறையாக பயிற்சி பெற்று, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்