Wednesday, September 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/23/large/719009.jpgநகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்?- முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கையில் தீவிரம் காட்டும் கூட்டுறவுத்துறை

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை அடமானம்பெற்று வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு வருவதால், யாருக்கு தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்குட்பட்டு கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, முதல்வரும் இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

அதே நேரம், நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை சுட்டிக் காட்டிய முதல்வர், ‘ஒரு குடும்பத்துக்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான எழை மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...