Tuesday, September 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/22/large/718651.jpgதிருப்பூர் ஆவின் ஜங்ஷன் விற்பனையகத்தில் அலங்கார வளைவில் அந்தரத்தில் தொங்கும் டைல்ஸ் கற்கள்: அசம்பாவிதம் ஏற்படும் முன் விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் ஆவின் ஜங்ஷன் நுழைவுப் பகுதியில் உள்ள அலங்கார வளைவில், அந்தரத்தில் தொங்கும் டைல்ஸ் கற்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் வீரபாண்டி பிரிவு அருகே இயங்கிவரும் ஆவின் ஜங்ஷன் விற்பனையகத்தில் பால், நெய், வெண்ணெய், பாதாம் பவுடர், பால்பேடா, பால்பவுடர் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதே வளாகத்தில், குழந்தைகளுக்கான பூங்காவும் இருப்பதால், நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த வளாகத்துக்கான 2 நுழைவாயில்களிலும் 25 அடி உயரத்தில் டைல்ஸ்கற்கள் கொண்டு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருநுழைவாயிலில் உள்ள வளைவில் டைல்ஸ் கற்கள் உடைந்து, அந்தரத்தில் தொங்குவதோடு எந்நேரமும் விழும் அபாய நிலையிலும் உள்ளன. சேதமடைந்த டைல்ஸ் கல்லை கயிறு கட்டி வைத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...