
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: விநாயகர் பிறந்த நாளான இந்நன்னாள், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் மகிழ்ச்சியையும் சகிப்புத்தன்மையையும் எடுத்து செல்லும்நாளாகும். கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றலை நம் அனைவருக்கும் விநாயகர் அருள்வார். தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, வளமை, அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தை கொண்டுவருவதாக விநாயகர் சதுர்த்தி அமையட்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்