Monday, September 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/07/large/713631.jpgஎவ்வித மாற்றமுமின்றி செயல்படுத்த முதல்வர் உத்தரவு; அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணிகள் 85% நிறைவு: ஜனவரியில் வெள்ளோட்டம் விட முடிவு

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.1756.88 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு - அவிநாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவு மற்றும் குடிநீர் வழங்கும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே 200 மீட்டர் தொலைவில், பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சி பகுதிகளில் உள்ள 1045 குளம், குட்டைகளுக்கு முதற்கட்டமாக நீர் நிரப்பும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது. இதன்மூலம் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...