
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், முதல்வர் ரங்கசாமியை வேல்ஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ் சந்தித்து பேசியுள்ளார். அவர் அப்பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி மாநிலங்களவை எம்பிகோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் அக்.6-ம் தேதியுடன் முடிகிறது. புதிய எம்பியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்.4-ல் நடக்கிறது. வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்