
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர்மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 1-ம் தேதி அன்று தொடங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், மார்ச 1-ம் தேதி தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்ற தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்