Wednesday, September 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/16/large/716250.jpgவேளாண் சட்டங்களுக்கு எதிராக 27-ம் தேதி நடக்கும் போராட்டத்தில் மநீம தலைவர் கமல் பங்கேற்பு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 27-ம் தேதி அகில இந்திய அளவில் முழு அடைப்பு, சாலை, ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கக் கோரி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசனை நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளர் துரை மாணிக்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாநில செயற்குழு உறுப்பினர் கே.வீ.இளங்கீரன், குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கோரினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...