Tuesday, September 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/15/large/716011.jpgதமிழக, கேரள வனப் பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்

தமிழக - கேரள எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு நவம்பரில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் கேரள போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது காட்டுக்குள் முகாம் அமைத்து தங்கியிருந்த மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த சம்பவத்தில்மேலும் ஒரு மாவோயிஸ்ட்டுக்குபலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி வனப்பகுதிக்குள் நடந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...