
கடலில் ஃபைபர் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை நேற்று முன்தினம் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, மீன்கள், வலைகளை பறித்துச் சென்றனர்.
நாகை கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தசெல்வக்குமார் என்பவரின் ஃபைபர் படகில், ரவீந்திரன்(28), கிருஷ்ணராஜ்(55), வேல்முருகன்(35), செல்வம் ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 கடல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 ஃபைபர் படகுகளில் ஆயுதங்களுடன் வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 9 பேர், மீனவர்களின் படகை சுற்றிவளைத்து, மீனவர்களைத் தாக்கி, 500 கிலோ மீன்கள், 2 செல்போன்கள் மற்றும் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்