Friday, September 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/04/large/712347.jpgதிருமண மையத்தில் பதிவு செய்திருந்த பெண்ணிடம் நெதர்லாந்து டாக்டர் என கூறி ஏமாற்றிய 2 பேர் கைது: வெளிநாட்டு மோகத்தில் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்த இளம்பெண்ணிடம் நெதர்லாந்து மருத்துவர் எனக் கூறி பல லட்சங்களை நூதன முறையில் பறித்த 2 நைஜீரியர்களை சென்னை சைபர் கிரைம் போலீஸார் டெல்லியில் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரபல திருமண இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். இவரிடம் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் முகமது சலீம் என்ற நபர் அறிமுகமானார். இதன்தொடர்ச்சியாக மும்பையில் இருந்து பேசிய பெண் ஒருவர், ‘நெதர்லாந்தில் இருந்து டாக்டர் முகமது சலீம் உங்களுக்கு பார்சல் அனுப்பி உள்ளார். அதனை பெற்றுக் கொள்வதற்கு ரூ.28 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்’ என்று கூறினார். பரிசு பெறும் ஆவலில் அந்தப் பெண்ணும் மும்பை பெண் அனுப்பிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...