
இந்தியன் ஆயில் பங்க்களில் எரிபொருளை நிரப்பிக் கொண்டு கூகுள் பே செயலி மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு கேஷ் பேக், ரிவார்டு புள்ளிகளை சமர்ப்பிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனமும், கூகுள் பே நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் வகையில் கூட்டுசேர்ந்துள்ளன. இதன்படி இந்தியன்ஆயில் பங்க்களில் எரிபொருள் நிரப்பிவிட்டு கூகுள் பே செயலிமூலம் பணம் செலுத்தினால் விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.500 வரை கேஷ்பேக் கிடைக்கும். இச்சலுகை நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரம் இந்தியன்ஆயில் பங்க்களில் கிடைக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்