
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று( 8-ம் தேதி) வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்