Thursday, October 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/08/large/724205.jpgதமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் பொறுப்பேற்பு

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில், இந்த முறை இச்சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு சங்கங்களால் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர், வேந்தர் ஐசரி கே.கணேஷ் ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

15 ஆண்டுகளுக்கு மேல் ஐசரி கே.கணேஷ் இச்சங்கத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்து வருவதும், தினத்தந்தி நாளிதழ் நிறுவனரும், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான பா.சிவந்தி ஆதித்தன் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகளுக்கு மேல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...