Friday, October 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/02/large/722031.jpgஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு; விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 66 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை

அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர், ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் ஆகிய பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

மேலும், ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வும் இந்த வாரியத்தால் நடத்தப்படுகிறது.கடந்த 2017 செப்டம்பர் 16-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து மதிப்பெண் பதிவு செய்யும் நிலையில் இந்த முறைகேடுகள் செய்யப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...