Friday, October 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/16/large/726832.jpgநீண்ட நாட்களுக்குப் பிறகு வார இறுதி நாட்களில் கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி: விஜயதசமியை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் வழிபாடு

வார இறுதிநாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, விஜயதசமியன்று பெரும்பாலான பக்தர்கள் கோயில்களில் தரிசனம் செய்தனர். மேலும் கோயில்களில் குழந்தைகளுக்கான ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகளும் நடைபெற்றன.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் பல கட்டங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கரோனா 2-ம் அலையைத் தொடர்ந்து, பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஆண்டு, அக். 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கூட்டம் சேருவதை தடுக்கும்விதமாக, வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...