
அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு விண்ணப்பித்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், நேர்முகத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் முதுநிலை பட்டதாரிகள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக உயர்கல்வித் துறையின்கீழ் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் காலியாகவுள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப உயர்கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) 2019-ம் ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு இணையவழியில் 44,000 பேர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் பதிவேற்றப் பணிகளும் இணையவழியில் முடிக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்