Friday, October 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/23/large/729532.jpgதமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 6-வது கட்டமாக இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்கிற தவறான தகவல் இருப்பதால், அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘தமிழக அரசிடம் 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் 57 லட்சம் பேர் உள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விவரங்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...