
செங்கல்பட்டு அருகே திம்மாவரம், வாலாஜாபாத் அருகே அவளூர் ஆகிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில சுயாட்சி பற்றி பேசும் திமுக, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை பறிக்காமல் முழுமையான அதிகாரங்களை அளிக்க வேண்டும். தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் தனித்து போட்டியிடுகிறோம். நீண்ட உழைப்புக்கு பிறகு ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். நாமும் நீண்ட காலமாக உழைத்து வருகிறோம். அடுத்து ஆட்சிக்கு வரப்போவது பாமகதான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்