
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தும் வகையில் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சியில் ரூ.4.5 கோடியில் குடிநீர் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே, அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படியே மாநகராட்சி, நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்துடன் கலந்துபேசி, அவர்கள் சொல்லக்கூடிய தேதியில் தேர்தல் நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்