Monday, October 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/19/large/727988.jpgமேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை வாக்காளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நடைபெற்ற இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் டிசம்பருக்குள் நடத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேநேரத்தில், இந்த அமைப்புகளின் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் அரசு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...