
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், திருப்பூர் மாநகரில் புதிதாக ‘பிங்க்’ ரோந்து முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரில் சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள் 8, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 2 என 10 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநகரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், குற்றங்கள் நடந்தால் சம்பவ இடத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்கவும் வசதியாக ‘பிங்க்’ ரோந்து முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் வே. வனிதா நேற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். ‘பிங்க்’ நிற இரு சக்கர வாகனங்களை பெண் போலீஸாருக்கு வழங்கிய பின்பு, மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்