
இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பல் மோதி மீனவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து அக்.18-ம்தேதி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ் மகன் ராஜ் கிரண்(30), சுதாகர் மகன் சுகந்தன்(30) அருளானந்தன் மகன் சேவியர்(32) ஆகியோர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பல் மூலம் இடித்ததில் மீனவர்களின் படகு கவிழ்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்