Sunday, October 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/11/large/725311.jpgதிருநெல்வேலியில் பாஜக பிரமுகர் மீது தாக்குதல் தர்ணாவில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன் கைது: திமுக எம்.பி., மகன்கள் உட்பட 30 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே பாஜக பிரமுகர் தாக்கப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி தொகுதி திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கைது செய்யக்கோரி திருநெல்வேலி சந்திப்பில் இரவில் தர்ணாவில் ஈடுபட்ட பொன். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். எம்.பி., அவரது மகன்கள் இருவர் உட்பட 30 பேர் மீது பணகுடி போலீஸார் கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஆவரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (35). பாஜக பிரமுகரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமுகவினருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 8-ம் தேதி காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பாஸ்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதுஅங்கு வந்த ஒரு கும்பல் அவரை தாக்கியுள்ளது. உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...