
கரோனா பாதிப்பால் உயிரிழந்த 36,220 பேரின் குடும்பங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி விஜயகோபால் என்பவரும், கரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உள்ளிட்டோரும் தொடர்ந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்