Friday, November 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/06/large/734528.jpgதிருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்: நவ.9-ம் தேதி பக்தர்கள் பங்கேற்பின்றி சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வரும் 9-ம் தேதி பக்தர்கள் பங்கேற்பின்றி சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.

கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கந்த சஷ்டி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். யாகசாலையில் சிவன்,பார்வதிக்கு உரிய பிரதான கும்பங்களும், சுவாமி, ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்குரிய கும்பங்கள் மற்றும் பரிவார கும்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. பகல் 12 மணிக்கு யாகசாலையில் மகாதீபாராதனை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...