Thursday, November 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/12/large/736499.jpgதிருச்செந்தூர் கோயிலில் முதல்வர் பெயரில் அர்ச்சனை: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் சர்ச்சை

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழா கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. சூரசம்ஹாரத்துக்கு முன்பாக நடைபெற்ற யாகசாலை பூஜையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பெ.கீதாஜீவன், இந்து சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...