Wednesday, November 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/11/large/736077.jpgமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடம் தேடிச் சென்று உதவும் சென்னை போலீஸார்

கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை போலீஸார் இருப்பிடம் தேடிச் சென்று உதவி செய்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால், சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையில் மீட்பு பணிகளில் ஈடுபடவும், பொது மக்களுக்கு உதவி செய்யவும் 13 காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன.12 காவல் மாவட்டங்களிலும் சட்டம் ஒழுங்கு போலீஸாருடன் இவர்கள் ஒருங்கிணைந்து மீட்புபணியில் ஈடுபட்டு, மழை வெள்ளம் பாதித்த இடங்களுக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டும், வெள்ள நீரை மோட்டார் மூலம் அகற்றியும், பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைத்தும், உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கியும் வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...