Thursday, November 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/12/large/736425.jpgபாலாறில் மணல் திருட்டை தடுக்க நீர்வள ஆதாரத் துறையினர் 'ட்ரோன்' கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாறில் மணல் திருட்டை தடுக்க நீர்வள ஆதாரத் துறையினர் 'ட்ரோன்' கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருக்கும் நந்தி மலையில் உருவாகி, கர்நாடகாவில் 93 கி.மீ., ஆந்திராவில், 23 கி.மீ.தூரம் பயணம் செய்கிறது பாலாறு. ௮தன்பின் வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக தமிழக எல்லைக்குள் 222 கி.மீ. பயணம் செய்து, செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாலாறில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு குடிநீரும் கொண்டு செல்லப்படுகிறது. அதே போல வாயலூர் மற்றும் ஆயப்பாக்கம் கிராமங்களில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...