
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் புகுந்தது. குன்றத்தூர் அருகே நீரில் சிக்கிய பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 40.40 மி.மீ, பெரும்புதூரில் 101.50, உத்திர மேரூரில் 72.80 , வாலாஜாபாத்தில் 45.10, செம்பரம்பாக்கத்தில் 135, குன்றத்தூரில் 139.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 89.07 மி.மீ. மழை பெய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்