Tuesday, November 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/10/large/735771.jpgதொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு: தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை

தொடர்ந்து பெய்து வரும் மழையால் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, ஓசூர், ராயக்கோட்டை சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி,போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை தளி, மத்திகிரி, பாகலூர்,சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளிசாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளி, ராயக்கோட்டை,ஓசூர், கிருஷ்ணகிரி சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...