Friday, November 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/27/large/741276.jpgஈசா ஏரி உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் படூர் ஊராட்சியில் வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்பு பகுதிகள்

திருப்போரூர் ஒன்றியம் படூர் மற்றும் புதுப்பாக்கம் இடையே 53 ஹெக்டேர் பரப்பளவில் ஈசா ஏரி அமைந்துள்ளது. தற்போது நிரம்பியுள்ள இந்த ஏரியின் உபரிநீர் கால்வாய்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் முறையாக வெளியேற முடியாமல், படூர் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால், வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக, ராதாகிருஷ்ணன் தெருவில் சாலையை பெயர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏரியின் உபரிநீர் ஓஎம்ஆர் சாலையோரம் உள்ள கால்வாயை அடைந்து கழுவேலி மூலம் பக்கிங்ஹாம் கால்வாயில் கலந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...