
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை நிபந்தனையுடன் பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை அரசுடைமையாக்க உத்தரவிட்டது.
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், சிவனேசன் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடந்த அக்டோபர் 11-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்