
குழந்தைகள் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை' சார்பில் ‘கோடத்தான்’ ஆன்லைன் குவிஸ் போட்டி கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறுபள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 9-ம்வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகள் 1,400-க்கும் மேற்பட்டோர் பதிவுசெய்திருந்தனர். அவர்களுள் தேர்வு செய்யப்பட்ட 586 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
நவீனகால முக்கியதிறன்களில் ஒன்றான கோடிங், கம்ப்யூட்டர்புரோகிராமிங்கில் முக்கியப்பங்காற்றுகிறது. கம்ப்யூட்டர்களுடன் மனிதர்கள் தொடர்புகொள்வதற்கான மொழியாகவும் கோடிங்உள்ளது. கோடிங் மூலம் மாணவர்கள், கம்ப்யூட்டர்களை இயக்கும் புரோகிராம்களை உருவாக்க கற்றுக்கொள்ளலாம் என்பதோடு, அவர்கள் படைப்பாற்றல் வெளிப்படவும் வழிவகுக்கும் வகையில் ‘ஹெச்டி கோடத்தான் கோடிங்’ திறன் பயிற்சியை ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் நடத்தி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்