Saturday, December 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/19/large/748642.jpg`பள்ளி பாதுகாப்பான இடம் இல்லை’ என கடிதம் எழுதிவைத்து மாணவி தற்கொலை

மாங்காடு பகுதியைச் சேர்ந்த பூந்தமல்லியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மாங்காடு போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, விசாரணையில் கடந்த சில நாட்களாக இந்த மாணவி தனக்கு நெருக்கமான தோழிகளிடம்கூட பேசாமல், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் ’பாலியல் துன்புறுத்தலை நிறுத்துங்கள். யாரையும் நம்ப கூடாது. பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறை மட்டுமே. பள்ளி பாதுகாப்பான இடம் இல்லை. எனக்கு நீதி வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...