Wednesday, December 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/02/large/742932.jpgமதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வாணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வாணையர் ரவி வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று திடீர்சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

உசிலம்பட்டி அருகில் உள்ள சங்கம்பட்டி காந்தி நகரில் வசிப்பவர் ரவி (55). இவர் உசிலம்பட்டி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் 2018-ம் ஆண்டு காமராசர் பல்கலைக்கழகத் தேர்வாணையராக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உசிலம்பட்டி கல்லூரிக்கு மாற்றப்பட்டார். தற்போது அக்கல்லூரி முதல்வராக உள்ளார். இவரது மகன் ராஜ்குமார் பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...