Wednesday, December 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/23/large/750041.jpgடிசம்பர் 23 புயலால் தனுஷ்கோடி அழிந்த 57-வது ஆண்டு நினைவு தினம்; ராமேசுவரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் பாதை: பீனிக்ஸ் பறவை போல புத்துயிர் பெறுகிறது

ராமேசுவரம்: பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையம், அதனருகேயே துறைமுகம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் கடல், அதில் எந்நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள். இவையெல்லாம் தனுஷ்கோடியின் முந்தைய அடையாளங் கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு,1914 பிப். 24-ம் தேதி போர்ட் மெயில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரே டிக்கெட்டில் தனுஷ்கோடிக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாருக்கும், பின்பு மீண்டும் ரயிலில் கொழும்பு வரையிலும் சென்றனர். 1964 டிச.23-ல்தனுஷ்கோடியை புயல் தாக்கியதில் ரயில் நிலையமும், துறைமுகமும் ஆயிரக்கணக்கான மக்களுடன் அழிந்து போனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...