Wednesday, December 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/23/large/750037.jpgபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: பொங்கலையொட்டி சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு மொத்தம் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகவுள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்துவரும் ஜன.12-ம் தேதி இரவு 9.45மணிக்கு புறப்படும் அதிவிரைவுசிறப்பு ரயில் (06001) மறுநாள்காலை 8.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து வரும் 13-ம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06002) மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து வரும் 13-ம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06005) மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து வரும் 14-ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06006) மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...