
சென்னை: வாகனச் சான்று, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை புதுப்பிக்கும் அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவகாசம் அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், வாகனச் சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் அவகாசம் தொடர்ந்து பல்வேறு கட்டமாக நீட்டிக்கப்பட்டு வந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும், போக்குவரத்தில் இன்னும்வழக்கமான நிலை திரும்பவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்