
சென்னை: தஞ்சாவூரில் தனியார் பள்ளி மாணவியை மதம் மாற வற்புறுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத் தலைவர் பிரங்க் கனூங்கோ, தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ஜன.20-ம் தேதி எங்களுக்கு வந்த புகார் ஒன்றில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ - மாணவியரை சட்டவிரோதமாக மத மாற்றத்தில் ஈடுபடுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்