Saturday, January 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/09/large/755595.jpgதொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சிக்காக அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பொறியியல் மாணவர்களுக்கு தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது துணைவேந்தர் வேல்ராஜ் பேசியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான ஆய்வுகள் நடைபெறுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் வணிகரீதியிலான தயாரிப்புகளாக வெளியே வரவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் தொழில்முனைவு சிந்தனையை ஏற்படுத்த வேண்டும். அடுத்த10 ஆண்டுகளில் அறிவுசார் பொருளாதாரம்தான் முன்னணியில் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...